Reviews

பார்த்து ரசித்த A GUN AND A RING திரைப்படம் தமிழ் முரசு அவுஸ்ரேலியா | Dec 2013 | செ .பாஸ்கரன் ஞாயிற்றுக்கிழமை 4 மணிக்கு இந்த திரைப்படத்தைப் பார்க்க ஓபன் றீடிங் சினிமாவிற்கு சென்றபோது நண்பர் ரஞ்சகுமாரையும் சக்திவேலையும் கண்டு கதைத்துக்கொண்டு சென்றேன் தியேட்டரை அடைந்த போது ஒரு சில தமிழர்கள் அதுவும் இலக்கியத்தோடு நெருக்கமானவர்களை மட்டுமே பார்க்கக் கூடியதாக இருந்தது. உள்ளே சென்று அமர்ந்தபோது ஒரு 30 பேர்வரைதான் பார்வையாளர்கள் இருந்தார்கள்.   […]

Reviews

எ கன் அன்ட் எ ரிங் வணக்கம்லண்டன் | Feb 2014 | கலாநிதி ந இரவீந்திரன் கனடாவிலிருந்து வெளியேறும் இறுதி நாளில் மாலைப் பொழுதில் (மன்ற ஒன்று கூடலுக்கு முன்னதாக) ஒரு திரைப்படத்தை நான் பார்த்து அது குறித்த விமர்சனத்தைக் கூற வேண்டுமென நண்பர் சேகர் கேட்டுக் கொண்டார். “எ கன் அன்ட் ரிங்” என்ற அந்த சினிமாவை எழுதி இயக்கியிருந்த லெனின் எம்.சிவம் தனது இல்லத் திரையில் அதனைக் காட்சிப்படுத்தியிருந்தார். விரைவில் கனடாவில் திரையிடப்பட […]

Reviews
ரமணன்
February 14, 2017

ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் MONDAY, SEPTEMBER 30, 2013 | ரமணன் ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் என்று பெயர் வைப்பதற்கு தான் அவர்கள் முதலில் யோசித்தார்கள் பின்னர் அது ஆங்கில வடிவம் பெற்று இன்று A Gun and a Ring ஆக எங்கள் முன் காட்சிப்படுத்தபபட்டுள்ளது.கடந்த சனிக்கிழமை இரவு இந்த திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சியினை காணும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைத்தது.   சீனாவில் நடைபெற்ற திரைப்பட விழாவிலும் மொன்ரியல் திரைப்பட விழாவிலும் சிறந்த திரைப்படம் […]

Reviews
கானா பிரபா
February 14, 2017

எங்கட கதை சொல்லும் சினிமா Friday, November 01, 2013 | கானா பிரபா முப்பது ஆண்டுகளைக் கடந்த ஈழத்தமிழர் இனவிடுதலை நோக்கிய போர் ஒரு பெரும் அழிவோடு மயானக் காடாய்க் கிடக்கிறது இன்னமும் அப்படியே. இது ஒருபுறமிருக்க, அழிவின் எச்சங்கள் ஐந்து ஆண்டுகளைத் தொட்டும் அப்படியே இருக்க, இந்த நீண்ட போரின் முந்திய அத்தியாங்களிலிருந்து பாதிக்கப்பட்டுத் தப்பிப்பிழைத்தவர்களிலிருந்து பயணிக்கிறது A Gun and A Ring திரைப்படம். போரிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களின் வாழ்வியலில் புலப்பெயர்வு கடந்தும் […]

Reviews

கடவுள் தந்த துப்பாக்கியும் ஒரு மோதிரமும் Thursday, 06 March 2014 – யமுனா ராஜேந்திரன் மேற்கத்திய சமூகத்தின் இயந்திர கதியிலான வாழ்வைப் பின்புலமாகக் கொண்டு இளைஞர்களிடத்திலும் யுவதிகளிடத்திலும் தோன்றியிருக்கும் வன்முறையைக் கொண்டாடும் அன்றாடக் கொலை உணர்வை தனது படங்களில் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார் ஆஸ்திரியத் திரைப்படக் கலைஞனான மைக்கேல் ஹெனக்கே. வியட்நாமிலிருந்து அமெரிக்கா வெளியேறியதன் பின், அமெரிக்கப் படைப்பணியினைக்; கடந்தகாலமாகக் கொண்ட ஒரு தலைமுறையின் உளச்சிதைவையும் குற்ற உணர்வையும் தற்கொலை மனப்பான்மைiயுயும் அவர்தம் அன்றாட வாழ்வில் […]

Reviews
ஷோபாசக்தி
February 13, 2017

தூங்கும் பனிநீரே January 19th, 2014 | Shobasakthi தமிழ்ச் சினிமாவைப் பார்ப்பது நேர விரயமே என எனக்கு நானே நீண்டகாலமாகச் சொல்லிக்கொண்டாலும் அது நிறுத்திவிட முடியாத கெட்ட பழக்கமாகவே என்னைத் தொடர்கிறது. தமிழ்த் திரையெங்கும் குவிந்துகிடக்கும் வண்ண வண்ணப் பிரமாண்டக் குப்பைகளிடையே ‘தூங்கும் பனிநீரே’ என்ற குடியானவனின் பாடலைப் போலவோ, கு. அழகிரிசாமியின் ஒரு சிறுகதையைப் போலவோ, பஷீரின் ஒரு நாவலைப் போலவோ, சீனத்துச் சினிமாவான ‘ரூகெதரை’ப் போலவோ எளிமையும் உண்மையும் அழகியலும் கொண்ட ஒரு […]