Reviews
வீரகேசரி
Reviews May 19, 2017
0

ஈழத் திரையின் பெரியதொரு பாய்ச்சல்!

October 22, 2015 | வீரகேசரி

சினி­மாவின் பாதையை நிர்­ண­யிப்­பதில் பெரும் சவா­லுடன் பய­ணிக்­கின்­றது 'ஒரு துவக்கு ஒரு மோதிரம்' என்ற திரைப்­படம். ஒரு போரின் பின்­னான தொடர்ச்­சி­யான விளை­வுகள் ஒரு போராட்­டத்தின் வெளியே தெரி­யாத பக்­கங்கள், புலம்­பெ­யர்ந்து செல்லும் தேசம் இன்­றைய புலம்­பெயர் தலை­மு­றையின் அந்­­நாட்டு கலா­சார நுகர்வு என்று வெவ்­வேறு திசையில் பய­ணிக்கும் வெவ்­வேறு ஈழச் சம்­ப­வங்­களின் தொகுப்பாய் ஒரு துவக்கும் ஒரு மோதி­ரம் பிணை­யப்­பட்­டுள்­ளது. இன்­றைய யதார்த்­தத்­துடன் இயல்­பான எமது பேச்சு தமிழில் படைத்­தி­ருக்­கிறார் இயக்­குனர் லெனின் எம். சிவம்.

ஈழ ஆயுதப் போராட்­டத்தின் விளை­வுகள், புலம்­பெயர் நாடொன்றில் பிறந்து வளரும் இளம் சமு­தா­யத்தின் உணர்­வு­களை, அவர்­க­ளுக்கும் பாரம்­ப­ரிய சமூகக் கட்­டுப்­பாட்­டுக்குள் இயங்கும் பெற்­றோ­ருக்­கு­மி­டை­யான முரண்­பா­டுகள் முன்னாள் போரா­ளிகள் எதிர்­கொள்ளும் சிக்­கல்­களை, எப்­போதும் உட­னி­ருந்து கொல்லும் உள­வியல் பிரச்­சி­னை­களை மிகை நடிப்போ, திணிக்­கப்­பட்ட வச­னங்­களோ இல்­லாது மிக இயல்­பாகப் பேசு­கி­றது படம் என்ற நண்பர் உமேஷின் கருத்­தாடல் சமூக சேவ­கி­யான மனை­வியைப் புரிந்து கொண்டு இலங்­கையில் விட்­டு­விட்டு குழந்­தையின் நல­னுக்­காக வெளி­நாட்­டுக்கு வந்து, பிற­ருக்கு உதவும் உறு­தி­யான மனம் படைத்த நல்­ல­வ­ரான சொர்ணம் - ஆரம்­ப­கால இந்­திய பயிற்சி முகா­மி­லி­ருந்து வெளி­யேறி கனடா வந்த, எளிதில் பதற்­ற­ம­டையும், பழைய நினை­வு­களில் அலைக்­க­ழிப்பால் எதையும் உருப்­ப­டி­யாகச் செய்ய முடி­யாத குழப்­ப­வா­தி­யான ஞானம்,- போரினால் பாதிக்­கப்­பட்டு, குடும்­பத்தில் தான் மட்­டுமே எஞ்­சிய, பாதிக்­கப்­பட்ட பெண்ணைத் திரு­மணம் செய்யும் இலட்­சி­யத்தில் ஒரு­வனால் வர­வ­ழைக்­கப்­பட்டு, அலைக்­க­ழிக்­கப்­பட்ட திட­மான இளம்பெண் அபி - எப்­போதும் நிதா­ன­மாக, உணர்ச்சி வசப்­ப­டாத, குற்ற உணர்ச்­சி­யில்­லாமல் பழைய வாழ்க்­கையை வன்­மு­றையை மறந்து விட்டு அல்­லது உள்­ளுக்குள் கனன்று கொண்­டி­ருக்க அமை­தி­யாக வாழும் அரியம், - தனது இரையைத் தேர்ந்­தெ­டுத்­து­விட்ட ஒரு சைக்கோ சீரியல் கொலை­கா­ரனைக் கண்­கா­ணிக்க வரும் பொலிஸ் புல­னாய்­வாளன் ஜோன் - அப்­பாவின் அறி­வு­ரையைக் கேட்டு வில­கிய தன்­னால்தான் நண்பன் தற்­கொலை செய்­து­கொண்டான் என நம்பும் ஓரினச் சேர்க்­கை­யாளன் ஆதி - இவர்­களைப் பிர­தான கதாப் பாத்­தி­ர­மாகக் கொண்டு நகர்­கி­றது கதை.

ஒவ்­வொரு பாத்­தி­ரத்தின் படைப்­புக்­களும் ஒன்­றுக்­கொன்று போட்­டி­யிட்­டுள்­ளன. எதி­லுமே தட்டுத் தடங்கல் இருக்­க­வில்லை. முழுக்க முழுக்க எம்­மவர் அடை­யா­ளத்­துடன் படைக்­கப்­பட்ட இந்த படத்தின் திரைக்­க­தை­ய­மைப்பு தமிழ்ப்­ப­டங்­களில் இது­வரை வந்­த­தாகத் தெரி­ய­வில்லை. தவிர, எடுத்­தா­ளப்­பட்­டி­ருக்கும் பிரச்­சி­னைகள், களம் முழுக்க எங்­களின் வாழ்வும், ஒரு முழு நீளத்­தி­ரைப்­ப­ட­மாக முற்­றிலும் புதி­தா­னது என்றே நம்­பு­கிறேன். நிச்­ச­ய­மாக, மனப்­பூர்­வ­மா­கவே எம்­ம­வரின் சினிமா என்று பெருமை கொள்­ளலாம்!
எனப் பதிவு செய்­கின்றார் இன்­னொரு நண்பர். ஆயினும் கனடா, லண்டன், பிரான்ஸ், சுவிஸ் என வாழும் ஈழ இளை­ஞர்கள் அவ்­வ­ளவு இல­கு­வாக சண்­டித்­த­னங்­களை விதைத்து விட்டுப் போக­மு­டி­யாது.

வெளி­நாட்டில் பிறந்து, வெளி­நாட்டுப் பிள்­ளை­க­ளோடு பழகி, வெளி­நாட்டுக் கலா­சா­ரங்­களை கண்­முன்னே பார்த்­து­வரும் பிள்­ளை­க­ளுக்கு, தமிழ் கலாச்­சா­ரத்தை வலிந்து திணிக்கும் போது அவர்­களின் மனப்­பி­றழ்வு என்ன என்­பதை ஏன் ஈழப் பெற்­றோரால் உண­ர­மு­டி­ய­வில்லை?

பயிற்சி முகாம் ஒன்றில் நடந்த படு­கொலை ஒன்றில் மயி­ரி­ழையில் தப்பி வெளி­நாடு வந்த ஒருவன், கண்­ணெ­திரே நடந்த படு­கொ­லை­களை மறக்­க­மு­டி­யாமல் அவ­தி­யுற்றால், அவனின் மன­நிலை எப்­படி இருக்கும். சூடான் மொழி­வ­ழக்கும் யாழ்ப்­பாணத் தமிழும் சிறப்­பாக உள்­ள­துடன், குறும்­ப­டங்­களில் ஈழப் பேச்சுத் தமிழைத் துல்­லி­ய­மாகக் கையாண்ட உருப்­ப­டி­யான முழு­நீளத் திரைப்­படம் என்றால் ஒரு துவக்கு ஒரு மோதிரம் ஆகும்.

அத்­தோடு பெற்­றோரின் தமி­ழி­லான கேள்­வி­க­ளுக்குப் பிள்­ளைகள் கலப்­ப­ட­மற்ற ஆங்­கி­லத்தில் பதில் சொல்­கின்­றனர். தாய் திணிக்கும் திரு­ம­ணத்தை வெறுத்து மாப்­பிள்­ளையை அவள் பய­மு­றுத்தும் வார்த்­தைகள் சிறப்பு.

அது வேற்று மொழி­யி­ன­ருக்கும் படத்­தினைப் புரி­வதில் உத­வு­கி­றது, வெறு­மனே கதை­களைத் தொடர்பு படுத்­து­வ­தோடு அவை ஓய்ந்து விட­­வில்லை. பிர­தா­ன­மாக ஒரிரு கேள்­வி­க­ளுக்­கான விடை­களைத் திரைப்­படம் தேடிச் செல்­லுக்­கையில் அவ் வகை­யான பல்­லு­ப­யோகக் காட்­சிகள் ஏராள கிளைக் கேள்­வி­களை எமை நோக்கி எறி­கின்­றன.

நிறையச் சிந்­திப்­ப­தற்கு இட­மி­ருக்­கின்­றன என்ற இன்­னொரு நண்­பனின் குறிப்பில், பாடல்கள், இயக்­கங்கள், சகோ­தரப் படு­கொலை, சூடான ஒப்­பீடு, பூசா, நான்­காம்­மாடி, வெள்­ளைவான் என வெளிப்­ப­டை­யான நுணுக்­க­மான ஆவ­ணப்­ப­டுத்­தல்­க­ளா­கவும் உள்­ளன என்­கின்றார்.

அத்­துடன், கண­வ­னாகப் போகின்­றவன் தன்னை வெளி­நாட்­டிற்கு அழைத்­ததில் நம்­பிக்கை கொண்ட கதா­நா­யகி தேனுஷா விமான நிலை­யத்தில் வைத்தே அவனால் ஏமாற்­றப்­ப­டு­வது நியா­ய­மா­னதா? அவள் வேறு ஒரு குடும்­பத்­துடன் தங்க வைக்­கப்­பட்டு பின்பு அவள் வேறு இடம் போகின்றாள். அங்கு சூடான் போதகர் ஒரு­வரும் தங்­கி­யுள்ளார். அவ­ரது உரு­வமும் கதையும் திரையில் பார்த்­துக்­கொண்டு இருப்­ப­வ­ரையே பய­மு­றுத்­தி­யது. தேனு­ஷா­வுக்கு பாது­காப்பு இருக்­குமோ? அவன் ஏதும் விப­ரீ­த­மாக நடந்து விடு­வானோ என்று அங்­க­லாய்க்க வைத்த மனசை இறு­தியில் இரு­வ­ருமே போரின் வடுக்­களை சுமந்­த­வர்­க­ளா­கவும் உற­வு­களை இழந்­த­வர்­க­ளா­கவும் தனித்து வாழ்­ப­வர்­க­ளா­கவும் தங்­களைப் பகிர்ந்து கொள்­கின்­றனர். இந்தப் பகிர்­தலின் புரி­த­லி­னூ­டாக மோதி­ரத்­தினை பரி­ச­ளிக்­கின்றார் சூடான் பாதர். ஆயினும் இடையில் தன்னை கன­டா­வுக்கு வர­வ­ழைத்த எதிர்­காலக் கணவர் எனக் கற்­பனை கண்ட நபரை அழைத்து அவள் கதை­யா­டு­வதும் இறு­தியில் அவனை நேர­டி­யாக அவள் நிரா­க­ரித்துச் செல்­வதும் இன்­றைய பெண்­க­ளுக்குத் தேவை­யான தைரிய மன­நிலை என்றே சொல்ல வேண்டும். தமிழ்ப் பண்­பாட்டை காரணம் காட்டி கல்­லா­னாலும் கணவன் புல்­லா­னாலும் புருஷன் என்­ற­ப­ல­ரது வாழ்க்­கையை இந்த பண்­பாட்டுப் போர்வை சீர­ழித்­துள்­ளது.

புலம் பெயர்ந்து போய் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு ஆட்­பட்டு மீட்­சி­யற்ற நிலையில் எத்­த­னையோ பேர் விசா அனு­ம­தியும் இல்­லாமல் துன்­பப்­பட்டுக் கொண்­டி­ருக்க அத­னையும் பொருட்­ப­டுத்­தாது குழுக்­க­ளாகி அடா­வ­டித்­தனம் செய்­வதும் வறட்டுக் கௌர­வங்­க­ளுடன் அலை­வதும் என்று இளை­ஞர்கள் செய்யும் அடா­வ­டி­களும் இந்த சமு­தா­யத்தின் தீர்­வு­க­ளாக அமைந்­து­வி­ட­மு­டி­யாது.
தன் மகனைத் தேடி பித்­துப்­பி­டித்துப் போய் அலையும் தாயை, இடும்பன் தன் மனை­வியை நோய்­வாய்ப்­பட்­டவள் என்ற கார­ணத்­தினால் மிக நேச­மாகப் பரா­ம­ரிக்­கின்றன் என்­றுதான் நினைத்தேன். ஆனால் பொல்லால் அடித்து அவரை கொலை செய்வது மட்டுமன்றி அவரின் இராணுவ ஆயுதமே அதுவாக இருந்துள்ளது என்று நினைக்க மிகப் பயமாய் இருந்தது. அவர் கோட்டலில் வேலைக்குப் போவதும் வீட்டில் மனைவியை பராமரிப்பதும் என்றே அவராலும் எத்தனை காலம் அப்படி வாழ முடியும்? என்ற கேள்வியும் எழுகின்றது. ஒரு வகையில் மனநோய் கூட அவருக்கு இந்த நிலையை கொடுத்திருக்கும் போலும் .... அவர் அடிச்சு சாக்காட்டின அக்காவை நினைக்க பயமாய் இருக்கு. பாவமாய் இருக்கு என்றார். பல்கலைக்கழக மாணவி சுயானி.

ஈழத்தவர்கள் அவ்வளவு இலகுவாக இந்த முரட்டுத்தனங்களில் இருந்து கடந்து போக முடியாது. எந்த நிலையில் எப்படிக் கஷ்ரப்பட்டு வெளிநாடு போனோம் என்பதை உணராத வரை அங்கு ஈழத்தமிழனின் வன்முறை இரட்சிப்புக்கு முற்றுப்புள்ளி இருக்காது. மொத்தத்தில் வன்முறை நிறைந்த முரண்பாட்டையும், மோதிரத்தினூடான மெல்லிய காதலையும் நினைவூட்டியவாறு யாழ்.கார்கில்ஸ் பூட் சிற்றி சதுக்கத்தில் அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் திரைகண்டது இத் திரைப்படம்.
இத்திரைப்படத்தினை விஷ்ணுமுரளி தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.