Reviews
தவ சஜிதரன்
Reviews May 19, 2017
0

ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் திரைப்படத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்

எதுவரை | இதழ் 15 | தவ சஜிதரன்

சுவாரசியம் அற்ற பகுதிகளைக் களைந்து விட்டு வாழ்க்கையைச் சொல்வது தான் சினிமா என்பார் ஹொலிவூடின் புகழ்மிகு இயக்குனரான அல்ஃப்ரெட் ஹிட்ச்கொக் (What is drama but life with the dull bits cut out – Alfred Hitchcock).
 
நாம் அறிந்த தமிழ் சினிமாவில் இது அபூர்வமாகவே நிகழ்வதுண்டு. பார்த்துச் சலித்த, ஒரேவிதமான கதைகளை மீள்சுழற்றித் தருவதையே தலையாய கடனாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது தமிழகத்தின் கனவுத் தொழிற்சாலை. நாயகனை மையப்படுத்தி வகுக்கப்பட்ட ஒரு பொதுச்சூத்திரத்துக்குள் அங்கும் இங்குமாகச் சில சம்பவங்களைக் கோத்து திரைக்கதை அமைப்பதே இங்கு வழக்கமாக இருந்து வருகிறது. விதிவிலக்குகள் உள்ளன. கடந்த ஒரு தசாப்தத்தில் தமிழக சினிமாவில் இந்த விதிமீறல் முயற்சி கொஞ்சம் வேகம் கண்டிருப்பது உண்மை தான் என்றாலும், அது இன்னமும் புறநடையாகவே இருக்கிறது.
தமிழகம் தாண்டி, தமிழ்மொழி புழங்கும் வேறு இடங்களைப் பார்க்கப்போனால் நிலைமை இன்னும் பரிதாபகரமானதாகத் தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் ஈழத் தமிழர்களின் எத்தனங்களைச் சொல்லலாம். பெரும்பாலானவை பயில்நிலைக் கலைஞர்களின் முதிர்ச்சியற்ற முயற்சிகளாக எஞ்சி விடுகின்றன. தமிழகத்தில் உள்ளதைப் போல பெருந்திரளான பார்வையாளர் பரப்பு இந்த இடங்களில் கிடையாது என்பது பிரதானமான சிக்கல். பாடுபட்டு உருவாக்கும் படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பிப்பதற்குரிய சந்தை நம்மிடம் கிடையாது. சினிமா பலரது கூட்டு உழைப்பைக் கோருகின்ற ஒரு கலை வடிவம். வலிமையான வணிகப் பின்புலம் இல்லாமல் கலையாக மாத்திரமே உயிர் வாழ்கிற திராணி பெரும்பாலும் அதனிடம் இருப்பதில்லை. ஈழத்துத் திரைப்பட முயற்சிகள் மேலெழுந்து வர முடியாமல் இருப்பதற்கு இது முக்கியமானதொரு காரணம்.
 
ஆனால், இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் வெளியுலகம் வியந்து பார்க்கக் கூடிய அற்புதமான ஒரு படைப்பை உருவாக்குவது சாத்தியம் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறது கனடாவில் கடந்த ஆண்டு வெளியான A Gun and A Ring. ஷாங்காய் சர்வதேசத் திரைப்பட விழாவில் கோல்டன் க்ளொபெட் விருதுக்காக 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களுடன் போட்டியிட்டு, இறுதி செய்யப்பட்ட 12 படங்களில் ஒன்றாக இது வந்திருந்தது. வேறும் பல சர்வதேச அரங்குகளிலும் விமர்சகர்களால் விதந்தோதப்பட்ட ஒரு படைப்பாக இது இனங்காணப்பட்டுள்ளது.படத்தின் ஒவ்வொரு சட்டகத்திலும் மேலே சொன்ன தமிழ்மொழித் திரைப்படங்களிலிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார் இயக்குனர் லெனின் எம். சிவம். A Gun and A Ring நாம் பெருமையுடன் உச்சி மோர்ந்து பாராட்ட வேண்டிய ஒரு படைப்பு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
 
படம் பார்த்து விட்டு அப்பால் நகர்ந்த பிற்பாடும், நெஞ்சுக்குள் நிழலாடியபடி பார்வையாளர்களைத் தொந்தரவு செய்கிற பண்பு நல்ல சினிமாக்களுக்கு உண்டு. ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும் அதைச் செய்கிறது. ஒன்றுடன் ஒன்று அறவே தொடர்பற்றதாகத் தோன்றும் சில நிகழ்வுகளை, ‘அட, இப்படி இருக்கும் என்று நாம் நினைத்தே பார்க்கவில்லையே’ என்று ஆச்சரியப்படும் விதமாகத் தொடுத்து விடுகிறார் லெனின் எம். சிவம். இத்தனை நுட்பமும் சுவாரசியமும் மிகுந்த கதைப்பின்னலை கடைசியாக எந்தத் திரைப்படத்தில் பார்த்தேன் என்று தேடினால் உடனடியாக எனக்கு நினைவுக்கு வரும் படம் ரோமன் பொலான்ஸ்கியின் The Ghost Writer. அதிலும் A Gun and A Ring போலவே உட்கிடையாக ஓர் அரசியல் விமர்சனம் இருக்கிறது என்றாலும் A Gun and A Ring அளவுக்குப் பல்வேறு அடுக்குகளோடு non-linear ஆக அமைக்கப்பட்ட கதை அதில் கிடையாது.
 
படத்தின் கதைச் சுருக்கத்தை எழுதுவது சிக்கலான காரியம். அத்தனை இழைகள் அதனுள் இருக்கின்றன. பிரதான பாத்திரங்களை வேண்டுமானால் பின்வருமாறு விபரிக்கலாம்: கடந்த காலத்தின் இருண்ட நினைவுகளால் பிறழ்வுற்றிருக்கும் முன்னாள் போராளி ஞானம்; தவிர்த்திருக்க வேண்டிய தனது தீர்மானத்தால் நிகழ்ந்த அனர்த்தத்தை எண்ணிக் குற்ற உணர்வால் தவிக்கும் புலனாய்வு அதிகாரி ஜோன்; தனது காதலனின் தற்கொலைக்குத் தந்தையின் பாசாங்குத்தனமான கயமையே காரணம் என்று எண்ணும் சமபால் நாட்டமுள்ள இளைஞனான ஆதி, மனைவியை இழந்த பிற்பாடு மகளைப் பேணி வளர்ப்பதையும் மக்கள் சேவையையும் மாத்திரமே தனது பணியாகக் கொண்டு வாழும் சமூகத் தலைவர் சொர்ணம்; தனது ஒரே மகனைப் பறிகொடுத்த சோகத்தில் விரக்தியுற்றிருக்கும் அரியம்; போரிலிருந்து தப்பிக் கனடா வந்த பிற்பாடு தனக்கு நிச்சயிக்கப்பட்டவனால் கைவிடப்பட்டு நிர்க்கதி நிலைக்கான போதிலும் துணிச்சலைத் துறக்காத பெண்ணான அபி – இவர்களைச் சூழ நடக்கும் சம்பவங்கள் எப்படி ஒரு துப்பாக்கியாலும் மோதிரத்தாலும் இணைக்கப்படுகின்றன என்பது தான் படத்தின் கதை.
 
நம்மால் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் நடக்கின்ற நிகழ்வுகளையும் சம்பவங்களையும் மாத்திரமே பொதுவாக நமது வாழ்வின் நிகழ்வுகளாக எடுத்துக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் வாழ்க்கை அப்படி இருப்பதில்லை. நான் இந்த வரிகளைத் தட்டச்சிக் கொண்டிருக்கும் இதே கணத்தில் எனது வாழ்க்கையில் தாக்கம் செலுத்தக் கூடிய வெவ்வேறு நிகழ்வுகள் நான் அறியாமலே வெவ்வேறு இடங்களில் நடந்து கொண்டிருக்கின்றன என்பது தான் உண்மை. எதிர்காலத்தை மாத்திரமன்றி நிகழ்காலத்தையும் கூட முழுமையாக அறிந்து கொள்ள முடியாத இந்தத் தன்மை தான் வாழ்க்கையை சுவாரசியமாக்குகிறது. இதைக் கவனத்தில் கொண்டு ஒருவர் தன்னுடைய கதையையும் கதாமாந்தர்களையும் சம்பவங்களையும் உருவாக்கும்போது அதில் சுவாரசியத்தன்மை இயல்பாகவே வந்து சேர்ந்து விடுகிறது. A Gun and A Ring கதை இப்படித்தான் உருவாகிறது. ஞானத்தை விட்டு விலகிச் சென்று இன்னொருவனோடு வாழும் அவனது மனைவி ஆத்திர மிகுதியில் அவன் முகத்தில் வீசி எறியும் அவர்களது திருமண மோதிரம், முற்றிலும் வேறுபட்ட ஒரு சூழலில் தனது காதலைச் சொல்லும் தருணத்தின் சாட்சியாக இருக்கும் என்று அபி அந்தப் பொழுதில் அறியப் போவதில்லை.
 
தனது துப்பாக்கி முனையில் உயிர் துறக்கப் போகும் பாலியல் வக்கிரம் கொண்ட ஒரு குற்றவாளியின் கையிலிருந்து நழுவி விழும் அவனது துப்பாக்கி, இன்னும் பலபேரின் உயிர் காவு கொள்ளப்படுவதற்குக் காரணமாக இருக்கப் போகிறது என்று புலனாய்வு அதிகாரியான ஜோன் குறித்த கணத்தில் அறியப் போவதில்லை. வானில் பறந்து கொண்டு பூமியைப் பார்க்கும் ஒரு பறவையைப் போல, மனித வாழ்வின் நிகழ்வுகளை அவற்றிலிருந்து விடுபட்ட நிலையில் இருந்து கொண்டு ஒருவர் பார்க்கும்போதே இப்படியான சம்பவக் கோவைகளை உருவாக்குவது சாத்தியமாகும். அதை வெகு நேர்த்தியுடன் செய்திருக்கிறார் லெனின்.
 
A Gun and A Ring ஓர் ஆழமான சமூக, அரசியல் நோக்கை முன்வைக்கிறது. ஆனால் அதில் பரப்புரைத் தன்மையோ வெற்றுக் கொட்டொலிகளோ கிடையாது என்பது முக்கியமானது. ஒரு சமூகமாக நாம் என்ன விதமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பட்டவர்த்தனமாகச் சித்தரிப்பதன் மூலம் நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ளும் நிர்ப்பந்தத்தை இந்தத் திரைப்படம் ஏற்படுத்துகிறது.
 
இதுவரை காலமும் நாம் வெளிப்படையாகப் பேசத் தயங்கிய விடயங்களைப் பேச வருமாறு அது கோருகிறது – சமபாலுறவாக இருக்கலாம், ஈழ விடுதலை இயக்கங்கள் நடத்திய குரூரமானஉட்படுகொலைகளாக இருக்கலாம், அல்லது புலம்பெயர் வாழ்விலே நம்மவர்கள் மத்தியில் நிலவுகின்ற அபத்தமான பாசாங்குத் தன்மையாக இருக்கலாம், இவை அனைத்திலும் பேசாப் பொருளைப் பேச விழைகிற முனைப்புத் தென்படுகிறது.
 
வன்னியிலிருந்து வரும் அபி போரில் தனது முழுக் குடும்பத்தையும் பலிகொடுத்தவர். உங்களில் எவராலும் என்னுடைய வலியைப் புரிந்து கொள்ள முடியாது என்று சொல்கிற அவரது வார்த்தைகள் ஒட்டு மொத்தப் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தையும் நோக்கிச் சொல்லப்பட்டவையாகக் கருதத் தக்கவை. இறுதியில் தான் சந்திக்க நேர்ந்த சூடான் நாட்டுக் கறுப்பரை தனது வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்து கொள்கிறார். சூடான் போன்றது தான் இலங்கையும் என்று அவர் சொல்கிற வசனத்தில் ஈழத்தில் நிகழ்ந்தது இனப்படுகொலை என்ற செய்தி உட்பொதிந்து வெளிப்படுகிறது.
 
ஈழத் தமிழ் சினிமாவுக்கு என்று ஒரு துறை இல்லாததால் எதிர்நோக்கும் பெரும் சவால்களை என்னுடனான நேர்காணலில் இயக்குனர் லெனின் கவனப்படுத்தியிருந்தார். அப்படியிருந்தும், இந்தப் படத்தில் அனைவரது நடிப்பும் எந்த வித நேர்த்திக் குறைவும் இல்லாமல் கனகச்சிதமாக வெளிப்பட்டிருப்பதை ஒரு சாதனை என்று தான் சொல்ல வேண்டும். தேனுகா, மதிவாசன் முதலானோரின் வெளிப்பாடுகள் அபாரம். ஞானம் பாத்திரத்துக்கு மன்மதன் பாஸ்கி அருமையாகப் பொருந்தி வருகிறார்.
எழுத்துத் தமிழை இழுத்துப் பேசி விட்டால் ஈழத் தமிழ் ஆகிவிடும் என்ற தப்பான புரிதலோடு ஈழப் பிரச்சனை பற்றிப் படம் எடுக்கும் தமிழக இயக்குனர்கள் நிச்சயம் இந்தப் படத்தின் உரையாடல்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். யாழ்ப்பாணப் பேச்சு வழக்குச் சார்ந்து ஒரு செப்பமான திரைமொழி இதிலே உருவாக்கப்பட்டிருக்கிறது.பிரவீன் மணியின் இசை படத்துக்குப் பக்க பலமாக நிற்கிறது.வணிக ரீதியாக வெற்றி பெற முடியுமா என்ற பெருங்கேள்வி இருந்தும் இதனைத் தயாரிக்க முன்வந்த விஷ்ணு முரளி பாராட்டுக்குரியவர். இயக்குனர் லெனினின் அடுத்த படைப்பு, தற்போதையதை விஞ்சும் விதத்தில் இருக்க வேண்டும் என்பதே நமது அவா.ட்ச்கொக் (What is drama but life with the dull bits cut out – Alfred Hitchcock).
 
எழுத்துத் தமிழை இழுத்துப் பேசி விட்டால் ஈழத் தமிழ் ஆகிவிடும் என்ற தப்பான புரிதலோடு ஈழப் பிரச்சனை பற்றிப் படம் எடுக்கும் தமிழக இயக்குனர்கள் நிச்சயம் இந்தப் படத்தின் உரையாடல்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். யாழ்ப்பாணப் பேச்சு வழக்குச் சார்ந்து ஒரு செப்பமான திரைமொழி இதிலே உருவாக்கப்பட்டிருக்கிறது.பிரவீன் மணியின் இசை படத்துக்குப் பக்க பலமாக நிற்கிறது.வணிக ரீதியாக வெற்றி பெற முடியுமா என்ற பெருங்கேள்வி இருந்தும் இதனைத் தயாரிக்க முன்வந்த விஷ்ணு முரளி பாராட்டுக்குரியவர். இயக்குனர் லெனினின் அடுத்த படைப்பு, தற்போதையதை விஞ்சும் விதத்தில் இருக்க வேண்டும் என்பதே நமது அவா.